தில்ஷானுடன் நெருக்கமாக பழகி கொலைச் செய்யத் தூண்டினேன் – செவ்வந்தி வாக்குமூலம்!

0
28

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பலவகையான திடிக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

‘கெஹெல்பத்தர பத்மே’ தான் தனக்கு கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்கவை அறிமுகப்படுத்தியதாகவும் “எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்” என்றும் தன்னிடம் கூறியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.

அதன்படி சமிந்து தில்ஷானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, கொலையைச் செய்யுமாறு தான் அவரைத் தூண்டியதாகவும் இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (17) கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவியின் தாயார் வீட்டில் இஷாரா செவ்வந்தி ஒன்றரை நாட்கள் மறைந்திருந்தமையும் அதன்பிறகு, வேறொரு நபரின் வீட்டில் சுமார் ஒன்றரை மாதங்கள் இஷாரா செவ்வந்தி தங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் ‘மத்துகம ஷான்’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் பாடசாலை நண்பர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்திற்காக தான் எந்தவித பணமும் பெறவில்லை என்றும் இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here