தீபாவளிக்கு மறுநாள் ஊவாவில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

0
195

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5ஆம் திகதி) ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கைக்யெடுத்துள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதன் காரணமாக வெள்ளிக்கிழமை ஊவாவில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டுமென ஆசிரியர்களும், பெற்றோரும் செந்தில் தொண்டமானிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையின் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊவாவில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here