தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் (05.11.2018) திங்கட்கிழமை அன்று மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்குமாறு இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொது செயலாளர் சங்கர் மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடரபாக கருத்து தெரிவித்த அவர் மத்திய மாகாணத்தில் அதிகமானோர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதுடன் அன்றைய தினத்தில் மக்கள் நெரிசல் அதிகம் இருப்பதால் மாணவர்கள பெரும் சிரமத்தை எதிர்நோக்குவார்கள். எனவே இதனை கருத்தில்கொண்டு விஷேட விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் உதவி செயலாளர் மற்றும் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் அவர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்