தென்கொரியா மீதான வரியை 25% ஆக அதிகரித்தார் ட்ரம்ப்!

0
28

தென்​கொரியப் பொருட்​களுக்​கான இறக்​குமதி வரியை 25% ஆக உயர்த்​து​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அமெரிக்​கா​வின் வர்த்தக ஒப்​பந்​தங்​கள் மிக​வும் முக்​கிய​மானவை. ஒப்​புக்​கொண்​டபடி நாங்​கள் வரியைக் குறைத்​துள்​ளோம். அதே வேகத்தை எங்​கள் வர்த்​தகக் கூட்​டாளி​களிட​மிருந்​தும் எதிர்​பார்க்​கிறோம்” என தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் இந்த நடவடிக்​கையை அடுத்து தென்​கொரி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் கார்​கள், மரக் கட்​டைகள் (Lumber) மற்​றும் மருந்​துப் பொருட்​கள் மீதான வரி​கள் உயர்த்​தப்​படும். இதர பொருட்​களுக்​கான வரி விகிதம் 15-லிருந்து 25 சதவீத​மாக அதி​கரிக்​கப்​படும்.

அமெரிக்​கக் கப்​பல் கட்​டும் தளங்​களைப் புதுப்​பிப்​பது உள்​ளிட்ட திட்​டங்​களுக்​காக, சுமார் 350 பில்​லியன் டாலர் தொகையை அமெரிக்​கா​வில் முதலீடு செய்​வ​தாக தென்​கொரியா கடந்த ஜூலை மாதம் உறு​தி​யளித்​திருந்​தது. இதற்​கான 5 மசோ​தாக்​கள் தற்​போது தென்​கொரிய நாடாளு​மன்​றத்​தின் நிலைக்​குழு பரிசீலனை​யில் உள்​ளன. இந்​தச் சட்ட நடை​முறை​கள் தாமத​மாவதால் அதிருப்தியடைந்த ட்ரம்​ப் அந்நாட்டுக்கான வரியை உயர்த்தியதாக கூறப்​படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here