சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.எதிர்வரும் வாரங்களில் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறையலாம் என எதிர்பார்ப்பதாக தென்னை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
விற்பனையாளர்களுக்கு தேங்காய் ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்கினாலும், அதன் நன்மை நுகர்வோரை சென்றடையவில்லை என இலங்கை தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.