வென்னப்புவ, பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஒன்று தலையில் தேங்காய் விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளது.
குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிடிவியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.