தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி ஒதுக்கிட்டில் நாட்டில் பலபாகங்களிலும் ஒவ்வொறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கபட்டு திறப்பு விழாகண்டு கையளிக்கபட்டுள்ள இந்நிலையில் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு தோட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் ஊடாக புனரமைக்கபட்ட மேடைக்கு என்ன நடந்தது என தோட்டமக்களும் இளைஞர்களும் கேல்வி எழுப்பியுள்ளனர்.
அந்தவகையில் கடந்த இரணடு வருடங்களுக்கு முன்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக 75.000ருபா நிதி ஒதுக்கிட்டிலும் தோட்ட பொதுமக்கள் மற்றும் தோட்ட இளைஞர்களின் பணத்திலும் அமைக்கபட்ட மேடை வெறும் தூண்களோடு இடை நிறுத்தப்பட்டுள்ளது அதன் பிறகு சிலமாதங்கள் கடந்த நிலையில் சேதமாகிய நிலையில் உடைத்தெறியப்பட்டது.
மீண்டும் குறித்த மேடை புனரமைக்க போவதாக மேடைக்கான குழிகள் மாத்திரம் தோன்றபட்டு கிடக்கும் நிலையில் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட வில்லையென பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர் இதே வேளை பொகவந்தலாவ லெச்சுமி மத்திய பிரிவூ விளையாட்டு மைதானத்தில் அமைக்கபட்ட மேடைகுறித்து கடந்த காலங்களில் தோட்டமக்களால் பொகவந்தலாவ பொலிஸ நிலையத்தில் முறைபாடு ஒன்றும் பதிவூ செய்யபட்டிருந்த வேலை இது தொடர்பான விசாரனைகளும் இடம் பெற்றன
அத்தோடு இந்த மேடையை மீண்டும் உடைத்து புனரமைக்கபட போவதாக அம்பகமுவ பிரதேசசெயலாளருக்கும் அறிவிக்கபட வில்லையெனவூம் அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.பி.டி.சுமனசேகர தெரிவித்து இருந்தார் எனவே பொகவந்தலாவ லெச்சுமி மத்தியபிரிவூ தோட்ட விளையாட்டு மைதனத்திற்கான மேடையை உடனடியாக அமைத்து தருமாறு தோட்ட இளைஞர்களும் தோட்டபொதுமக்களும் கோறிக்கை விடுத்துள்ளனர்
இதேவேலை குறித்த மேடை தொடர்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கனேசன் இளையராஜாவை தொடர்பு கொண்டு வினவினோம் பொகவந்தலாவ லெச்சுமி மத்திய பிரிவூ தோட்டமைதானத்தில் உள்ள மேடை குறித்து புனரமைத்து தருவதாக கூறியிருந்தார்கள் இது குறித்து சம்பந்த பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவூம் குறிப்பிட்hர் இதேவேலை முன்னால் இளைஞர் சேவைகள் மன்ற நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம்.சதீஸ்குமாரிடம் வினவினோம் நான் இருந்த காலபகுதியிலோ பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவூ மைதான மேடைக்கான நிதி தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் ஊடாக ஒதுக்கபட்டது குறித்த மேடையின் அமைக்கும் நடவடிக்கை குறித்து தேசிய இளைஞர் சேவைகள் அதிகாரிகளின் ஊடக கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)



