தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் தீர்மானம்!

0
72

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சபரிமலை யாத்திரைக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவிலான பக்தர்களை இணைத்துக் கொள்ளவும், அதற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையைப் பெற்றுத்தருமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here