தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவராக பேராசிரியர் அசித டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த, நியமனக்கடிதத்தை வழங்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரமவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.