கொழும்பு – பொரல்லை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டு கொண்டு வந்த பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுளளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரல்லை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரே, இந்த கைக்குண்டை கொண்டு வந்த பிரதான சந்தேகநபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.