தலவாக்கலை லோகி தோட்ட சந்தியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் ஆலயத்தை பாதுகாக்க கோரியும் ஆலமர கிளைகள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டமையினால் பலியான ஆசிரியருக்கு நீதி கிடைக்க கோரியும் தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் கடையடைப்பு போராட்டம் 08/03/2022 முன்னெடுக்கப்பட்டது.இப்போராட்டத்திற்கு கொட்டகலை வர்த்தக சங்கம் முழு ஆதரவினை வழங்குவதாகவும் இதற்கான உரிய தீர்வு கிடைக்கப்பெறாத விடத்து கொட்டகலை நகர கடைகளும் அடைக்கப்படுமென கொட்டக்கலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் தலவாக்கலை லோகி தோட்ட சந்தியில் அமையப்பெற்றுள்ள வழிப்பிள்ளையார் ஆலயம் பாரம்பரிய ஆலயம் காலங்காலமாக பொதுமக்களின் வழிபாட்டு தலமாக காணப்படுகின்றது.இக்கோவிலை அழித்து அவ்விடத்தை அபகரிக்க நினைக்கும் விஷமிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த கடைகளையும் அடைத்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளமை வரவேற்கதக்கது.இக்கடையடைப்பு போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் அதேபோல இதற்கு அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகளும் தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.அதற்கான முழு ஒத்துழைப்பினை கொட்டகலை வர்த்தக சங்கமும் கொடுக்கும்.
இப்பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் குறித்த ஆலயத்திற்கும் ஆலமரக்கிளை முறிந்து பலியன ஆசிரியருக்கு தீர்வு கிடைக்காதவிடத்து கொட்டக்கலை நகரமும் கடைகள் அடைக்கப்பட்டு முடங்குமென கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்