தைவானை மீண்டும் இணைப்பது காலத்தின் கட்டாயம் – சீன அதிபர் ஜின்பிங்!

0
78

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. இதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே வேறு எந்த நாடுகளும் தைவானுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது.

அதன்படி கடந்த வாரம் தைவான் எல்லையை சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது. இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜின்பிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சீனாவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் தைவான் எதிர்கொள்ளும் என அதிபர் லாய் சிங்-தே கூறினார்.

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here