தொடர்ரூந்து சேவையாளர்களின் பணி புறக்கணிப்பால் மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பில்லை!

0
149

தொடர்ரூந்து சேவையாளர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தினால் மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.புகையிரத சேவையாளர்கள் 29.05.2018 அன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்ற போதிலும் மலையக புகையிரத சேவைகள் எதனையும் இரத்துச் செய்யவில்லை எனவும் அவை வழமை போலேவே இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் 29.05.2018 அன்று மாலை முதல் வழமையாக வரும் புகையிரதங்களும், கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதங்களும் வழமையான நேரத்தினை விட சுமார் மூன்று மணித்தியாலங்கள் காலம் தாழ்த்தி வருகை தந்ததாகவும் இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

தொழிற்சங்க போராட்டம் காரணமாக புகையிரதத்தில் வரும் பெரும்பாலான பயணிகள் மாற்றும் பாடசாலை மாணவர்கள் 30.05.2018 அன்றைய தினம் மாற்று வழிகளை பயன்படுத்தி அதிகாலையிலேயே வர வேண்டிய நிலை ஏற்பட்டதனால் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாகவும் பயணிகள் மேலும் தெரிவித்தனர்.

தொழிற்சங்க போராட்ட காரணமாக 30.05.2018 அன்றைய தினம் புகையிரத்தில் வரும் பயணிகள்  மிகவும் குறைவான பயணிகளே சமூகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

photo (4)

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here