தனது இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் கட்டப்பட்டிருந்த தொடிலில் ஊஞ்சலாடிய சிறுமி தொட்டில் கயறு கழுத்தில் இறுகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூப்பனை மேல்பிரிவு தோட்டத்தில் 20/01 மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் முத்து குமார் பவித்ரா 11 வயதுடைய முத்து குமார் பவித்ரா எனும் சிறுமியே உயிரிழந்ததுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒரே வீட்டில் இருந்த மூன்று சிறுமிகள் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பொழுது போக்குக்காக வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கயிற்று தொட்டிலில் ஊஞ்சலாடி விளையாடியுள்ளனர்.
இதன் போது உயிரிழந்த சிறுமியை தொட்டிலில் அமரவைத்து அதன் கயிற்றை ஏனைய சிறுமிகள் தொட்டி லை ஆட்டியுள்ளனர்.
இதன் போது தொட்டில் சுற்றிய நிலையில் சிறுமியின் கழுத்து ம் இறுகியுள்ளது .
இதை காட்டிக்கொள்ள முடியாமல் சிறுமி மூச்சு தினமணி உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
டி.சந்ரு