தொண்டமான் இளைஞர் படையணி அங்குரார்ப்பணம் இன்று இடம்பெற்றது.
டயகம பிரதேச இளைஞர்கள் ஒன்றினைத்து தொண்டமான் இளைஞர் படையணி என்ற இளைஞர் அமைப்பு இன்று டயகம நகர மண்டப்பத்தில் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
டயகம பிரதேசத்தில் இளைஞர்களை ஒன்றினைக்கும் முகமாகவும் எமது கலை கலாச்சாரங்களை பாதுகாக்ககூடிய வகையிலும்,இளைஞர் யுவதிகளின் திறமைகேற்ப வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து எம் சமூகம் முதன்மைமிக்க சமூகமா உருவாக்கப்பட வேண்டும் என்பதே இவ்வமைப்பு உருவாக்கத்தின் நோக்கம் என இ.தொ.கா டயகம-அக்கரப்பத்தனை பிரதேச அரசியல் அமைப்பாளர் பா.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற தொண்டமான் படையணி அங்குரார்ப்பண நிகழ்வில் இ.தொ.கா வின் பிரதி தலைவர் கௌரவ.அ.ராமையா அவர்கள்,இ.தொ.கா வின் தேசிய அமைப்பாளரும் சட்டதரணியுமான கௌரவ.ராஜதுரை அவர்களும்,முன்னால் தமிழ் கல்வி அமைச்சர் கௌரவ.அனுசியா சிவராஜா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கௌரவ.சக்திவேல் அவர்களும்,இ.தொ.கா வின் உதவிசெயலாளரும் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சின் இணைப்பு செயலாளர்.கௌரவ சச்சிதானந்தன் மற்றும் இ.தொ.கா இளைஞர் அணியின் உதவி செயலாளர் ராஜமணி பிரசாந்,அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள்,இ.தொ.கா முக்கியஸ்தர்கள்,இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.
குலசேகர் லீபன்.