சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான மத்திய சீனாவில் உள்ள 42-அடுக்கு வானளாவிய கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வானளாவிய தீ தீப்பிழம்புகள் மற்றும் கரும் புகையை காணக்கூடியதாக இருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், இவ்விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷா நகரில் உள்ள சீனா தொலைதொடர்பு கட்டிடத்தில் பல மாடிகள் எரிந்துள்ளன.
தீயை விரைவாக அணைக்க 280 தீயணைப்பு வீரர்களை அனுப்பியதாக நகரின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, என்று சீனா தொலைதொடர்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.