தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான. மயில்வாகனம் உதயகுமாரின் சொந்த நிதியின் ஊடாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனை, தலவாக்கலை ,பூண்டுலோயா பணிமனையில் பணியாற்றுகின்ற முழுநேர உத்தியோகஸ்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் கொண்ட பொதிகள் கையளிக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலவாக்கலை பணிமனையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன்,
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களான ரவிச்சந்திரன், நாகேந்திரன், தலவாக்கலை அமைப்பாளர் கிரே, மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.