தொழிலதிபர்களிடம் ‘ஹனி டிராப்’ முறையில் பணம் பறிப்பு – இளம்பெண் கைது, காதலன் தலைமறைவு

0
56

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் ஒரு இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அவரை ஒரு ஓட்ட லுக்கு வரவழைத்த அந்த பெண், தொழிலதிபர் குளிக்கச் சென்ற நேரத் தில் அவர் படுக்கையில் வைத்திருந்த நகை, பணம் மற்றும் செல் போனை திருடிக்கொண்டு தப்பியோடினார்.

பின்னர் மர்ம நபர்களுடன் சேர்ந்து கொண்டு அந்தத் தொழிலதிபரை மிரட்டி பணமும் கேட்டுள்ளார். இது குறித்து தொழிலதிபர் அளித்த புகா ரின் பேரில், அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த திலக்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், தொழிலதிபரை ஹனிடிராப் முறையில் அழைத்து சென்று நகை-பணத்தை பறித்தது பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுராவை சேர்ந்த தீபா அவடகி (வயது 33) என்பதும், இவர் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி அவருடன் போலீசாரே ஒருவரை தயார் செய்து பேசவைத்து ஓட்டலுக்கு வரவழைத்தனர்.

அங்கு வந்ததும் தீபாவை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், தீபா, பெலகாவி மாவட்டம் ஹுக்கேரியை சேர்ந்த சிவானந்த் என்பவரை காதலித்து வருவதும், இருவரும் சேர்ந்து தான் ‘ஹனிடிராப்’ முறையில் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை குறிவைத்து பணம், நகை பறித்து வந்ததும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை இருவரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தீபாவிடம் இருந்து 2 கார்கள், 11 செல்போன்கள் உள்பட ரூ.32 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருக்கும் காதலன் சிவானந்தை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here