தொழிலாளர் தேசிய சங்கத்தின் 57 ஆவது வருட மே தின நிகழ்வுகள் தோட்ட வாரியாகவும் பிரதேச வாரியாகவும் இடம் பெற உள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் இவ்வருட மே தின நிகழ்வுகளைத் தோட்ட வாரியாகவும் பிரதேச வாரியாகவும் நடத்துமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கேற்ப நாளைய மே தினத்தினை முன்னிட்டு தோட்டம் தோறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.