தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரான பழனி திகாம்பரம் அவர்களின் வழிக்காட்டலின் மூலம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் மீண்டும் மகளீர் தின விழா மாகான சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு தலைமையில் 08-04-2018 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமணி, நுவரெலிய நகர சபையின் உபதலைவி புத்திரசிகாமணி யதர்சனா, நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் மகளீர் உறுப்பினர்களும் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.