தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலவாக்கலை பிரதேச தோட்டக் கமிட்டி தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று தலவாக்கலை ஆர்த்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் தோட்ட கமிட்டி தலைவர்களுக்கு தெளிவூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நிதிச்செயலாளர் சோ.ஸ்ரீதரன்,
தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், பிரதி தேசிய அமைப்பாளர்
கல்யாணகுமார் , மாநில இயக்குனர் சதாசிவம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலவாக்கலை அமைப்பாளர்களான ரவி,கிரே,சிவராஜ், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.