மலையக மக்கள் பிரதிநிதிகள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஒரு நிலையற்ற தன்மையே காணப்படுகின்றது ஒருவர் 1700 பெற்றுத்தருவதாக கூறுகிறார் இன்னொருவர் மற்றுமொன்றை கூறுகிறார் ஆகவே அவர்கள் மத்தியில் கூட இணைக்கப்பாடு இல்லாத நிலையே காணப்படுகின்றனர். குருமார்கள் என்ற வகையில் நாங்கள் அவர்களிடம் கோரிக்கை விடுப்பது அனைவரும் ஒன்றாக இணைந்து வேலைக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுக்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசியல் தலைமகள் மலையகத்தில் இருக்கின்றது தான் நாங்கள் உணருகின்றோம்.காரணம் எத்தனை தொழிற்சங்கங்கள் எத்தனை அரசியல் கட்சிகள் எத்தனை அமைப்புக்கள் இருக்கின்றன ஆனால் எங்களுடைய தாய் தந்தையர்கள் எங்களுடைய உறவுகளுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. இது வருகின்ற தேர்தலை குறிவைத்து ஆடுகின்ற ஒரு கபட நாடகமாகவும் எங்கள் தொழிலாளர்கள் விளையாட்டு பொம்மைகளாக அரசியல் செய்து கொண்டிருப்பதாக நாங்கள் உணருகிறோம் என இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளரும்,அகில இலங்கை இந்து மஹா தலைவருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொது கூட்டம் இன்று 27 ம் திகதி காலை 10.30 மணியளவில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் அமைந்துள்ள தலைமை பீட காரியாலயத்தில் செயளாளர் சிவ ஸ்ரீ வேலு சுரேஷ்வரசர்மா தலைமையில் நடைபெற்றது அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;க்கையில் மலையகத்தில் இன்று தேயிலை தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் படாத பாடுபடுகிறார்கள் அவர்களுக்கு சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு இன்றுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தவறியுள்ளார்கள் அதற்காக நாங்கள் ஆழ்ந்த கவலையும் வெளியிடுகிறோம் ஆகவே முதலாளிமார் சம்மேளனத்துடனோ அல்லது அரசாங்கத்திடமோ பேசி அவர்களுக்கான நியாயமான சம்பளத்தனை பெற்றுத்தர அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளும் அதே வேளை இன்று மலையகத்தில் இருக்கின்ற குருமார்களுக்கு காணியோ நிலமோ கிடையாது அவர்களுக்கு எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி சமய சேவைகளை முன்னெடுத்து வருகிறார்கள் ஏனைய சமயங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்ற சலுகைகள் வசதிகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை இவர்களுக்கு இருப்பது கோயில் நிர்வாகத்தினால் அமைத்துக்கொடுக்கின்றன ஒரு சிறிய தற்காலிக வீடுகளே எனவே ஏனையவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் சலுகைகள் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் இது குறித்த நாங்கள் சம்பந்தப்பட்ட பல அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.அரசியல் பேதமின்றி அனைத்து மலையக தலைவர்களுடன் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளோம்.
ஆகவே இந்திய விடமைப்பு திட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற வீடுகளில் இந்து குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு காணித்துண்டாவது பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஏனென்றால் அவர்களும் இந்த மலையகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கும் குடும்பங்கள் பிள்ளைகள் இருக்கின்றன.எனவே கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட இந்த விடயத்திற்கு பொருப்பான அமைச்சர்கள் தலையிட்டு இந்த விடயத்தினை தீர்த்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்து கூட்டத்தில் ஆண்டறிக்கை கணக்கறிக்கை ஆகியன சர்ப்பிக்கப்பட்டு புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாட்டில் பல பாகங்களில் இருந்து இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் குருமார்கள் கலந்து கொண்டிருந்ததுடன். அவர்களும் கருத்து தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்