தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணிகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கள் இணைந்து இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.