தோட்டப் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் திட்டம் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் வரவு செலவு திட்ட ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரைடாயலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, அத்துடன் தோட்டத் துறையில் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மேலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் இணைசெயற்பாட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை ஒருங்கிணைப்பது மற்றும் கலைக்கப்பட வேண்டிய நிறுவனங்களை கலைப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.