தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக பிரச்சாரம் செய்கின்றனர் ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா.உபதலைவர் எஸ்.அருள்சாமி குற்றச்சாற்று
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் பிரச்சாரமாக மலையகத்தில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்கள் மக்கள் மத்தியில் முன்னெடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.
27.12.2018.வியாழகிழமை ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இ.தொ.கா.உபதலைவர் எஸ்.அருள்சாமி தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல அரசியல் பிரச்சினை எவ்வளவோ இருக்கிறது தொழிலாளர்களுடை சம்பளம் என்பது தொழிற்சங்க உரிமை உலகத்திலே எத்தகையோ நாடுகளிலே அவர்கள் பிரதமராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் கூட தொழிற்சங்கவாதிகள் ஊடாகத்தான் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கு போராடுகிறார்கள் அந்த அடிப்படையில் தான்
கடந்த 80ஆண்டுகளாக இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தொழிலாளர்களின் உரிமைகளுக்காய் போரடி வந்திருக்கிறது அதன் அடிப்படையில் தான் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் ஒரு அமைச்சராகவோ
ஒரு அரசில்வாதியாகவோ அல்லாமல் ஒரு தொழிற்சங்க தலைவராகத்தான் இந்த ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார் இதற்கான புள்ளிவிபரங்களை கூட நாங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம்
முன்வைத்துள்ளோம்
ஜீலைமாத வாழ்க்கை செலவை எடுத்து கொண்டால் ஒரு கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் வாழ்வதற்கு 812ரூபா தேவை படுகிறது ஒரு நாளைக்கு இதில் வைத்திய செலவு பாடசாலை செலவு போன்றவற்றை இணைத்தால் 912ரூபா தேவைபடுகிறது இதேவேலை இந்த ஆயிரம் ரூபாவை நாங்கள் உருவாக்கியது அல்ல சில பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிபகுதியில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கி உணவு வசதி
போக்குவரத்து வசதி என்பன வழங்கி கிட்டதட்ட ஒரு நாளைக்கு தொழிலாளர் ஒருவருக்கு 1350ரூபா வழங்கினார்கள் எனவே இந்த பேச்சிவார்த்தை வரும் பொழுது நாங்கள் இதனை நியாயபடுத்தினோம்.
இந்த ஆயிரம் ரூபா ஸ்திரமான தொழிலாளர்களுக்கு வழங்கபட வேண்டியது நியாயம் தானே என்பது கேட்பது தவறு
அல்ல இதனை அரசியல் மயமாக்கி மக்களை பிரித்து வேடிக்கை பார்ப்பதன் மூலம் இந்த முகாமைத்துவ கம்பணிகள் தன்பக்கம் சாதகமாக்கி கொண்டு இந்த கோரிக்கையை இழுத்தடிக்கிறார்கள் தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர்
மாதம் 15ம் திகதி கலாவதியானது இலங்கை தொழிலாளர் காங்ரசும் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமும் பெருந்தோட்ட கூட்டமைப்பும் ஒரு மாதகாலத்திற்கு முன்பு ஒக்டோபர் மாதமே பெருந்தோட்ட முகாமைத்துவத்தோடு நாங்கள் பேச்சிவார்த்தை
நடாத்தி எங்கள் நிலைமையை நாங்கள் தெழிவுபடுத்தியபோது கூட அவர்கள் 500ருபாவில் இருந்து ஒரு சதத்தை கூட அதிகரிக்க முடியாது என கூறினார்கள்.
பிறகு எங்களின் பேச்சிவார்த்தையின் அழுத்தத்தின் காணமாக 550ரூபா தருவதாக கூறினார்கள் இறுதியில் 600ரூபா தருவதாக இலுத்தடிப்பினை மேற்கொண்டார்கள் ஆனால் 600ரூபாவை முன்பே இவர்கள் கூறியிருந்தால் மக்களிடம் ஒரு கருத்தினை
கேட்டு நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கலாம் ஆனால் இவர் தோட்ட தொழிலாளர்களை பிச்சைகாரர்களை விட இவர்கள் கேவலமாக என்னியதால் தான் இந்த கோரிக்கையில் இருந்து விலகமுடியாத சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம்
சிலருக்கு இந்த ஆயிரம் ரூபாவை வைத்து கொண்டு அரசியல் செய்யும் நோக்கம் இருக்கிறது ஆனால் இ.தொ.கா.விற்க்கு கிடையாது கூட்டுஒப்பந்தத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டால் இதனை பெற்றுவிடலாம் என்பது ஒரு கேளிகூத்தான
விடயம் உண்மையாக தொழிலாளர்களுடைய பிரச்சினை என்றால் தொழிற்சங்க தலைவர்கள் என்ற அடிப்படையிலே ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் ஆயிரம் ரூபா அல்ல இரண்டாயிரம் ரூபா வேண்டுமானாலும் பெறலாம் அதனை இல்லாமல் செய்தது சில
தொழிற்சங்க அரசியல்வாதிகளே மீண்டும் எங்களை முதலாளிமார் சம்மேளனம் அழைப்பவிடுத்து இருக்கிறது பண்டிகைகாலம் ஆரம்பித்ததினால் கம்பணியுடாக நிறைவேற்று அதிகாரிகள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையால் அவர்கள்
நாடு திரும்பியவுடன் ஜனவரிமாதம் முதல் வாரத்திலே இந்த பேச்சிவார்த்தையை ஆரம்பி இருப்பதோடு இலங்கை தொழிலாளர் காங்ரசுக்கும் அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கும் முழுமையான நம்பிக்கை இருக்கிறது மக்களுடைய
எதிர்பார்ப்பினை நிறைவேற்றி கொடுக்கமுடியயும் என அவர் மேலும் தெரிவித்தார்
தோட்டதொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சமபளத்தினை வழியுருத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது கூட சில தொழிற்சங்க தலைவர்கள் கூறியிருந்தார்கள் 500ரூபாவிற்கு மேல் ஒரு சதம் கூட அதிகரித்து கொடுக்கமாட்டார்கள் என கூறினார்கள் மக்களின் ஆர்பாட்டங்கள் காரணமாக இன்று 600ரூபாவிற்கு வந்திருக்கிறது இந்த 600ரூபாவை வைத்து கொண்டும் மக்களுடைய பலவீனத்தை வைத்து கொண்டும் இந்த நிலைபாட்டில் அவர்கள் இருக்கிறார்கள் ஆனால் தற்பொழுது அந்த நிலமை மாறியுள்ளது எதிர் வரும் நாட்களில் ஒரு நியாயமான தீர்வுக்கு வருவார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)