மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்டவர்களை தங்கவைக்கபட்ட தற்காலிக இடங்களில் இருந்து வெளியேறுமாறு வழியுருத்தியமையால் தோட்டமக்கள் டயர் எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டம்.
பொகவந்தலாவ ரொப்கில் கீழ் பிரிவு தோட்டத்தில் மண் சரிவில்பாதிக்கபட்ட 03மூன்று குடியிருப்பாளர்களை சேர்ந்த 15பேரை தற்காலிகமாக தங்கவைக்கபட்டிருந்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வழியுருத்தியமைக்கு பாதிக்கபட்டவர்களுக்கு பணிநிறுத்தபட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து 01.05.2018.வெள்ளிகிழமை காலை தொழிலுக்கு செல்லாது தோட்ட கொழுந்து மடுவத்திற்கு அருகாமையில் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி பொகவந்தலாவ ரொப்கில் கீழ் பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம்
காரணமாகவும் பாறைகள் சரிந்து விழுந்த அபாயம் காரணமாக குறித்த தோட்ட லயன் குடியிருப்பில் இருந்து மூன்று குடும்பங் சேர்ந்த 15பேர் 319ஜீ.கெர்க்கஸ்வோல்ட் கிராம சேவகர் பிரிவிற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தின் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியலத்தின் ஊடாக இம் மக்கள் வெளியேற்றபட்டு ரொப்கில் தமிழ் வித்தியாளயத்தின் ஆசிரியர்களின் விடுதியிலும் தோட்ட உத்தியோகத்தினர் விடுதிகளிலும் தங்கவைக்கபட்டதாகவும் தற்பொழுது ஒருவருடமும் 03மாதங்கள் கடந்துள்ள போதும் தற்பொழுது தோட்ட நிர்வாகம் பாதிக்கபட்ட மக்களை வெளியேற கோருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
மண்சரிவும் கற்பாறைகளும் சரிந்து விழுந்த பகுதியில் நாங்கள் போய் எவ்வாறு சிறு பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ்க்கை நடாத்துவது எனவே பாதிக்கபட்ட மக்களுக்கு மாற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு உரிய வீடுகளை அமைத்து தருமாறும் எங்கள் பிரச்சினை குறித்து மலையக அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.
எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்