லெச்சுமி தோட்ட நிர்வாக அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பினால் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு.மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கீழ் பணிபுரிகின்ற பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாக அதிகாரிகளும் 15.02.2018. வியாழக்கிழமை காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுளனர்.
நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள உதவி வெளிகள உத்தியோகத்தர் ஒருவரை தொழிலாளர் ஒருவர் தடியினால் தாக்கபட்டமை சம்பவத்திற்கும் குறித்த தொழிலாளரை நோர்வூட் பொலிஸார் கைது செய்ய வேண்டுமென கோரியும் இந்த பணிபகிஷ்கரிப்பு இடம் பெறுவதாக தெரிவித்தனர்.
பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மத்தியபிரிவு, கீழ் பிரிவு, மேற்பிரிவு, எல்பட கீழ் பிரிவு, எல்பட மேற்பிரிவு ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த வெளிகள உத்தியோகத்தர்கள் மற்றும் லெச்சுமி தோட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் காலையில் இருந்து இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்த பணி பகிஷ்கரிப்பின் போது உதவி வெளிகளை உத்தியோகத்தரை தாக்கிய தொழிலாளரை நோர்வூட் பொலிஸார் கைது செய்யும் வரை நாங்கள் தொழிலுக்கு செல்லபோவதில்லையென பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரீசோதகருமான கமல் அபேசிஸ்ரீயவை தொடர்பு கொண்டுவினவினோம். அதற்கு பதிலளித்த அவர் தாக்குதலுக்குள்ளான வெளிகள உத்தியோகத்தரால் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்
இதேவலை இன்று காலை முதல் லெச்சுமி தோட்டமத்திய பிரிவு, மேற்பிரிவு, கீழ்பிரிவு எல்பட கீழ் பிரிவு, எல்பட மேற்பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களால் பறிக்கபடும் தேயிலை கொழுந்தினை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்காத காரணத்தினால் தொழிலளர்கள் பெரிதும் பாதிப்பட்டுருப்பதாகவும் இது குறித்து சம்பந்தபட்ட மலையக அரசியல்தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கபடவேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இதேவேலை இன்றைய தினம் லெச்சுமி தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை மற்றும் காரியாளயம் மூடபட்டு காணபடுகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதிஸ்)