தோட்ட வெளிகள உத்தியோகத்தரை வெளியேறுமாறு கோரி தோட்ட தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு- டிக்கோயாவில் சம்பவம்!!

0
148

டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டமக்கள் கடந்த 15நாட்களாக தொடர் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தனர்.

தோட்ட வெளிகள உத்தியோகத்தர் விடுதி மேல் தாக்குதல் மேற்கொண்டவர் இருவர் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில்.

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தொடர்நதும் 15நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.

இத் தோட்டமக்கள் கடந்த 25ம் திகதியில் இருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .

டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்ட வெளிகள உத்தியோகத்தரை தோட்டத்தை விட்டு வெளியேறும் மாறு கோறியே இந் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாகவும், குறித்த தோட்டத்தில் உள்ள தேயிலை காணிகள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும் 600தேயிலை மரங்கள் கெலனிவள தேயிலைபயிர் செய்கை கம்பணியில் கீழ் பிரித்து கொடுக்கபட்டுள்ளதோடு கடந்த 24ம் திகதி குறித்த தோட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 80கிலோ கொழுந்தினை நிலுவைக்காக தோட்ட வெளிகள உத்தியோகத்தரை நாடிய பொழுது குறித்த குடும்பத்தரால் பறிக்கபட்ட தேயிலை கொழுந்து முறையாக இல்லை என தெரிவித்தற்காகவே குறித்த தோட்ட வெளிகள உத்தியோத்தரை தோட்டத்தை விட்டு வெளியேரும் மாறு கோறி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த தோட்ட வெளிகள உத்தியோகத்தரை சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டத்தை விட்டு வெளியேற்றும் வரைக்கும் நாங்கள் பணிக்கு திரும்பப்போவதில்லையென சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர் .

இவ்வேலை டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்ட வெளிகள் உத்தியோகத்திரன் வீட்டின் தாக்குதல் நடத்திய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து அட்டன் நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர் வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here