தமிழ் முற்போக்கு கூட்டணி பல புரட்ச்சிகளையும் போராட்டங்களையும் இந்த சமூகத்திற்காக செய்யும் பொழுது எங்களுடைய என்னம் கருவில் இருக்கின்ற குழந்தை கூட லயன்ங்களில் வாழாது அது அடிமையயும் இல்லை இந்த மண்ணின்னுடைய மானத்தை காக்ககூடிய இனமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.
சாமிமலை மானௌ இமாக்கொலை பகுதியில் தனிவீட்டுத்திட்டத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இதனை தெரிவித்தார். இதன் போது அவர் தொடர்ந்தும் உறையாற்றுகையில் சமூகத்தில் உரிமைகளை மீட்கின்ற போது எங்களுக்கு கிடைப்பது தோல்வியாக இருக்கலாம். உள்ளுராட்சிசபைகளை அமைத்தது நாங்கள் ஒரு கூட்டமைப்பின் பலத்தோடு ஒருபுறம் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக வீடமைப்பு திட்டங்களும் கல்விதிட்டங்களும் சிறப்பாக இடம் பெற்றுகொண்டிருக்கிறது மக்கள் தான் கூறினார்கள் நாங்கள் அடிமைகளாக இருக்கின்றோம் அடக்கு முறையில் இருக்கின்றோம் இதனை மீட்டுதாருங்கள் என கேட்டார்கள்.
நாங்கள் மலையகத்தில் பலசாதனைகளை செய்து இருக்கின்றோம் மலையகத்தில் லயன்ங்களை உடைத்தெரிந்து புதிய கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலே மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு வழங்கபட்டுள்ளது அதேபோல் கல்வி ரீதியில் எங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் அவர்களுக்கு வழங்கபட்டுள்ளது.
இந்த அமைச்சு பதவியினை பெற்று மூன்று வருடங்களுக்கு மேல் கடந்துள்ள போதும் 5000வீடுகள் மலையக பெருந்தோட்டங்களில் அமைக்கபட்டுள்ளன. இன்னொருபுறம் மலையகத்துக்கென ஒரு தேசியபாடசாலை உருவாக வேண்டும் மலையகத்தில் ஒரு பல்கலைகழகம் ஹோலிருட் தோட்டத்தில் உருவாக்குவதற்கு ஜப்பான் நாட்டு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது ஒரு தேசிய பாடசாலை உறுவாக்குவதற்கு நானுஒயா எடின்புரோ இந்த வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எஸ். சதீஸ்