மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியேறிய புகையினை சுவாசித்த நிலையில், பணியாளர்கள் சுகவீனம் அடைந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் நச்சு புகையை சுவாசித்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆண் மற்றும் 9 பெண்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரில் அமைந்துள்ள புடவை மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுக்குட்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மின் விநியோகம் தடைப்பட்ட நிலையில், மின் பிறப்பாக்கி ஊடாக மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியேறிய புகையினை சுவாசித்த நிலையில், பணியாளர்கள் சுகவீனம் அடைந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.பாதிப்புக்குள்ளானவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.