நன்பேரியல் தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய செந்தில் தொண்டமான்

0
169

பலாங்கொடை பிளான்டேஷனுக்கு உட்பட்ட நன்பேரியல் தோட்டம் நெக்ரக் பிரிவு மக்களுக்கு உலர் உணவு பொருட்களை சிவன் அருள் அமைப்பாள் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தோட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் சிவன் அருள் அமைப்பினர் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டத்தை தொடர்ந்து குறித்த அமைப்புக்கு எவ்வித தடைகளுமின்றி தோட்டத்தில் சென்று உலர்வு உணவு பொருட்களை வழங்குவதற்கான அனுமதியை அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

கடந்த ஒருமாதகாலத்திற்கு முன்னர் பலாங்கொடை பிளான்டேஷனுக்கு உட்பட்ட நன்பேரில் தோட்டம் நெக்ரக் பிரிவு மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான முயற்சிகளை பொகவந்தலாவே ராஹுல தேரர் தலைமையில் சிவன் அருள் அமைப்பினர் மேற்கொண்டனர். என்றாலும் தோட்ட நிர்வாகம் அவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கான அனுமதியை மறுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவேவின் கவனத்துக்கு பொகவந்தலாவ ராஹுல தேரர் கொண்டுசென்றதன் பின்னர் சப்ரகமுவ மாகாண ஆளுனர் தோட்ட நிர்வாகத்திடம் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதி வழங்குமாறு கோரியும் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.

அன்றைய தினம் காலை 5 மணிமுதல் மாலை 5 மணிவரை உலர் உணவு பொருட்களை வழங்க சிவன் அருள் அமைப்பினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டதால் வேறு வழியின்றி உலர் உணவு பொருட்களுடன் அவர்கள் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பலாங்கொடை பெருந்தோட்ட கம்பனியுடன் செந்தில் தொண்டமான் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் சமூக நலன்புரி அமைச்சின் பெருந்தோட்ட சமூக இணைப்பாளர் ரூபன் பெருமாளுடன் சிவன் அருள் அமைப்பினர் எவ்வித தடைகளுமின்றி, தோட்டத்தில் உலர் உணவு பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

அசாதாரண சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து,நெருக்கடிக்களுக்கு மத்தியில் இருந்த நன்பேரியல் தோட்ட மக்கள் , இந்த உதவியை பெற்றுக் கொடுத்த செந்தில் தொண்டமானுக்கும்,சிவன் அருள் அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here