வாடகை தாய் குறித்து நயன்தாராவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறினீர்களே விளக்கம் கேட்கப்பட்டதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பதில் அளித்துள்ளார்சமீபத்தில் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்
இந்த நிலையில் அதிகாரிகள் மூலம் நயன்தாராவிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் இதுபற்றி நயன்தாரா தரப்பில் இருந்து விரிவான அறிக்கை தர ஒப்புக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை வந்தவுடன் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
கருமுட்டை தானம் மற்றும் வாடகைத்தாய் ஆகிய இரண்டுக்கும் இருவேறு விதிகள் உள்ளன என்றும் அந்த விதிகள் பின்பற்றப் பட்டதா? அல்லது மீறப்பட்டதா? என்பது குறித்து பின்னர் ஆராயப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்