நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை நாடாளுமன்றம்

0
77

முடிவடைந்த தெற்காசிய தேசத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) வெற்றிக்காக இலங்கை நாடாளுமன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அரசாங்கமும் மற்றும் எதிர்க்கட்சியும் அண்டை நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பகிரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் மீதான நீண்டகால இருதரப்பு உறவுகளைத் தொடர இலங்கை எதிர்நோக்குவதாக பிரதமர் தினேஷ் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அத்தோடு, தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் வெளிச்சத்திற்கு வரும் சவால்களை சமாளிக்கவும் வாய்ப்புகளை ஆராயவும் இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயல்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன், இந்தியாவுக்கு (India) இலங்கை (Sri Lanka) ஆதரவளிப்பதாகவும் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவதற்கு சபை அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பரிந்துரைத்துள்ளார்.

இதனடிப்படையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிய குடும்பத்தில் இருந்து வந்த பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரானதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளதோடு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா எதிர்காலத்தில் உலக விவகாரங்களில் முன்னணி வகிக்கும் என்று இரு தலைவர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here