பக்தர்கள் படைசூழ நல்லுர் கந்தசுவாமி தேவஸ்தான இரதோற்சவம்

0
307

வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை, சமேதராக தேரில்வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 26.08.2022 அன்று தீர்த்தத்திருவிழாவுடன் திருவிழா அனைத்தும் நிறைவடையும்.

இவ் மஹோற்சவத்திற்கு நாட்டின் பலபாகங்களில் இருந்து பக்தர்கள் வருகைதந்து இரதோற்சவத்தில் கலந்துகொண்டு நல்லையம்பதி அலங்காரக்கந்தனின் அருட்கடாச்சத்தினை பெற்றுச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here