நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலை!

0
44

அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) இன்று நள்ளிரவு முதல் அனைத்து சிற்றுண்டிசாலை மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் பிரைட் ரைஸ் மற்றும் கொத்து விலை 30 ரூபாயும், ஷார்ட் ஈட்ஸின் விலை 10 ரூபாயும் அதிகரிக்கும் என்று சங்க தவிசாளர் ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உணவக உரிமையாளர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

உணகங்களுக்கு தேவையான முக்கிய பொருட்கள் அனைத்தும் விலை அதிகரிக்கும் போதும் அந்த பொருட்களின் விலைகளை குறைக்குமாறு தாங்கள் ஜனாதிபதியிடம் கோரவில்லை என சுட்டிக்காட்டிய அவர், துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவகங்களைப் பாதுகாப்பதற்கு எந்த ஆதரவும் வழங்கப்படவில்லை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here