இதுவரை காலமும் மேற்கொள்ளபடாத நவீன முறையிலான அபிவிருத்தி திட்டங்களை மஸ்கெலியா பிரதேச்சபையின் அங்கத்தவர்களோடு கை கோர்த்து முன்னெடுப்பேன் என்கிறார்.
மஸ்கெலியா பகுதிக்கு இதுவரை காலமும் மேற்கொள்ளபடாத நவீன முறையிலான அபிவிருத்தி திட்டங்களை மஸ்கெலியா பிரதேச்சபையின் அங்கத்தவர்ளோடு கைகோர்த்து முன்னெடுக்கபட உள்ளதாக மஸ்கெலியா பிரதேசசபை தவிசாளர் திருமதி கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்தார் .
04.04.2018. புதன்கிழமை காலை தனது தவிசாளர் கடமையை உத்தியோகபூர்வாக பொறுப்பேற்று ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உதவி தவிசாளர் பெரியசாமி பிரதீபன், மஸ்கெலியா பிரதேச்சபையின் உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி எனது கடந்த கால தொழிற்சங்க வரலாறானது 33வருடங்களை கடந்துள்ள எனக்கு மஸ்கெலியா தவிசாளராக என்னை நியமித்தற்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு முதலில் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.
கடந்த காலங்களில் மஸ்கெலியா பகுதியில் பாரிய அளவிலான எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களும் இடம் பெறவில்லையென மக்கள் மனதில் ஒரு கவலை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே இ.தொ.கா.வின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய அனுமதியோடு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கஉள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான் ஒரு தோட்ட தொழிலாளியின் பிள்ளை நானும் ஒரு சாதாரண தோட்ட தொழிலாளியாக இருந்த என்னை அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் வெளிநாடுகளுக்கு சென்று பலபயிற்சிகளை பெற்று கொண்டுள்ளேன். அந்த பயிற்சியின் அடிப்படையில் மஸ்கெலியா பிரதேசசபையை ஒரு சிறந்த பிரதேசசபையை நிலைநாட்டுவேன் எனவும் மேலும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)