நுவரெலியா தமிழ் கல்வி வலையத்தின் கீழ் இயங்கும் நாகசேனை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஒன்றியம் ஒன்று அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை ஆர்த்திமஹால் மண்டபத்தில் (16) திங்கட்கிழமை காலை வித்தியாலயத்தின் பழைய மாணவர்களான யோ.மொழியழகன் மற்றும் கே.பரமசிவம் ஆகியோர் தலைமையில் புதிய ஒன்றியத்தின் ஆரம்ப ஒன்றுகூடல் நடத்தப்பட்டது.
இதில் குறித்த நாகசேனை தமிழ் வித்தியாலத்தில் 1989 ஆம் ஆண்டு அதிபராகவும் கடமையாற்றி செய்தால்.முருகேசு அவர்கள் பிரதமர் அ திதியாக கலந்துகொண்டு ஒன்றியத்தை அங்குரார்பணம் செய்து வைத்தார். அத்தோடு இந்த ஆரம்ப நிகழ்வில் வித்தியாலயத்தின் தற்போதைய அதிபர் திருமதி குகணேஸ்வரி உள்ளிட்ட வித்தியாலயத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் கல்விகற்று வெளியேறிய பழைய மாணவர்கள் மாணவிகள் பலரும் கலந்துகொண்டு கொண்டனர்.
அத்தோடு கல்வி மற்றும் அபிவிருத்தியில் பின்பற்றப்பட்டு காணப்படும் சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் எதிர்கால அபிவிருத்திகளை பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்தது முன்னெடுத்து செல்லவே முதன் முறையாக பழைய மாணவர்கள் ஒன்றியம் அங்குரார்பணம் செய்யப்பட்டதாக உரையாற்றுகையில் பழையமாணவர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை நிருபர்