ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் லங்கா டி ஜயரத்னவினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய அவர் மீதான 70 மில்லியன் ரூபா மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த வழக்கை விசாரித்த புறக்கோட்டை நீதவான் லங்கா டி சில்வா, அவரை 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரரப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
அதேவேளை வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்த நீதவான், அடுத்த விசாரணையை ஓகஸ்ட் எட்டாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.