நாடு முழுவதும் தாக்குதல் மேற்கொள்கிறது ரஷ்யா : உக்ரைன் ஜனாதிபதி : இராணுவ தளங்கள் மீதே தாக்குதல் – ரஷ்யா விளக்கம்

0
133

உக்ரைனின் கிழக்கு பகுதியில் மாத்திரமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இராணுவத் தளங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உக்ரைன் தங்களது இலக்கு இல்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தார்.

ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில ரஷ்ய இராணுவம் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில் தற்பாதுப்பை மேற்கொண்டு வரும் உக்ரைன், ரஷ்யாவின் ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில்,

‘கீவ் பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்து மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.நாடு முழுவதும் உள்ள இராணுவ தளங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. நாங்கள் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசவில்லை என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் வீசப்படவில்லை. உக்ரைனில் உள்ள இராணுவ தளவாடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இராணுவ மற்றும் விமான தளங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here