நாட்டிக்கும் வீட்டிக்கும் சாந்தி சமாதானம் சகவாழ்வே கிடைக்க வேண்டும் என வேண்டும் என வேண்டி ஜேசு பிராணின் பிறப்பினை நினைவு கூறும் நத்தார் பண்டிகையின் நல்லிரவு ஆராதனை ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் பலத்த பொலிஸ் மற்றும் இரானுவ பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அடிகளாரின்; தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இவ்வருடம் நல்லிரவு ஆரதனை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இரவு சுமார் 10.30 மணியளிவில் ஆரம்பமானது.
இந்த நல்லிரவு ஆராதனையில் திருபலி ஒப்புக்கொடுத்தல், விசேட நத்தார் ஆராதனை,ஆகியன இடம்பெற்றதுடன் கெரோல் கீதங்களும் இசைக்கப்பட்டன.

இந்த தேவ ஆராதனையில் நாட்டில் தற்போது பீடிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று நீங்கி நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கயிலிருந்து விடுப்பட்டு நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ விசேட பிராத்தனைகளும் இடம்பெற்றன. குறித்த ஆராதனைக்கு ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தோட்டப்புற மற்றும் நகர மக்கள் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்



