நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

0
181

நாட்டின் தென்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், மேலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here