இலங்கையை பாதிக்கும் வளிமண்டல மாசுபாட்டின் அளவு இன்று (11) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு இன்று (11) காலை வெளியிட்ட தரவுகளின்படி, இலங்கையில் நேற்றைய தினத்தை விட இன்று வளி மாசுபாடு குறைந்துள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் காற்று மாசு மதிப்பு 123 ஆக குறைந்துள்ளதுடன், அது நல்ல மட்டத்திற்கு வளர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று(10) கொழும்பு மாவட்டத்தில் காற்று மாசு மதிப்பு 191 ஆகக் காணப்பட்டதோடு புத்தளம் 117, யாழ்ப்பாணம் 109, கண்டி 106, பொலன்னறுவை 103, குருநாகல் 100, கேகாலை 97 ஆகவும் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு 101 – 150 என்ற நிலை உணர்திறன் கொண்ட வளி மாசுப்பாட்டு நிலை ஆரோக்கியமற்றது என்று குறிப்பிட்ப்பட்டுள்ளது.