நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
38

நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அதன் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக ஜகத் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைக்கைதி ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவழிக்கப்படுகின்றது.

பெரும்பாலான சிறைக்கைதிகள் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.

இவ்வாறு போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படுபவர்கள் சிறைசாலைகளில் தடுத்துவைப்பதற்கு பதிலாக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் ஜகத் வீரசிங்க பரிந்துரைத்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படுவதால் சிறைச்சாலைகளிலுள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here