நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
62

பண்டிகை காலங்களை இலக்கு வைத்து சமூக வலைத்தளம் மற்றும் SMS ஊடாக இடம்பெறும் நிதி மோசடி தொடர்பல் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கிகள், அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் , சர்வதேச அமைப்புகள் என்ற போர்வையில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. மக்களின் நிதியை மோசடி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

சட்டரீதியிலான நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி நன்கொடைகள், பணப்பரிசில்கள், அதிஷ்ட சீட்டிழுப்புகள், தொழில் காப்புறுதி வழங்குவதற்கான உறுதி மொழிகளின் ஊடாக இந்த நிதி மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. போலி இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள். எஸ்.எம்.எஸ் மற்றும் வட்ஷ்சப் வாயிலாக தனிப்பட்ட ரீதியில் மக்களை அணுகுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர்.

இவற்றின் வழியாக அனுப்பும் லிங்க் முகவரிகளை கிளிக் செய்வதன் ஊடாக கணனி மற்றும் கையடக்க தொலைபேசிகளின் டேட்டாக்களும் களவாடப்படுகின்றன. அண்மைக்காலமாக இதுபோன்ற மோசடிகள் விழாக்கள் மற்றும் மத நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here