நானுஓயா.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபஸ்போட் தோட்டத்தில் உள்ள கடையொன்றில் தீ பரவியதால் ககை முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.
இச்சம்பவம் இன்று 29.07.2018 அதிகாலை 02 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடையில் இருந்த பொருட்கள் மற்றும் உடமைகள் அணைத்தும் எரிந்து சாம்பலாகியது.
பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இனைந்து தீயை பரவவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.என தெரியவந்துள்ளது.தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டரியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



டி சந்ரு



