நானுஓயா டெஸ்போர்ட் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி; போதையின் விபரீதம்!

0
171

நானு ஓயா – டெஸ்போர்ட் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயங்களோடு நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தானது இன்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெஸ்போர்ட் தோட்டத்தின் மேற்பிரிவிற்கு செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வீடொன்றின் மீது மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது – அத்தோடு மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மது அருந்தி இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுஜீவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here