நாமலுக்கு மேலுமொரு புதிய பதவி!

0
213

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

உபகுழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்ததாகவும் அமைச்சர் அலி சப்ரி அதனை உறுதிப்படுத்தியதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள் மற்றும் தொழில் முனைவோர் கொள்கைகள் ஆகியவற்றைச் சீர்திருத்துவது தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற, அந்தத் துறைகளின் நிபுணர்களை துணைக் குழுவின் முன் அழைக்க, குழுவின் உறுப்பினர்கள் இதன்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.

அந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளின்படி, ஒரு மாதத்திற்குள் குறுகிய கால முன்மொழிவுகள், மத்திய காலப் பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும் நீண்ட காலப் பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும் தேசிய பேரவையில் சமர்ப்பிக்க உபகுழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here