மீது குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று(15) அவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அதிபராலும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டனர்.
கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்று தளபாடங்களை சேதபடுத்திய குற்றத்திற்காக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில், குறித்த மாணவர்களின் சொந்த செலவில் சேதமாக்கப்பட்ட வகுப்பறை மற்றும் தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப்பரீட்சை முடிவடைந்த அன்று, பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சிலர் மின் விசிறிகள், மேசைகளை சேதப்படுத்தி நாற்காலிகளை தொங்கவிட்ட சம்பவம் சமூகத்தில் பேசுபொருளாக மாறியது.
வர்ணம் பூசி பிரியாவிடை செய்த மாணவர்கள் – இது சரியா? உதவி கல்வி பணிப்பாளரின் கருத்து இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்று மீது குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று(15) அவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அதிபராலும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.