நாவலபிட்டியில் மஞ்சள் கடவையில் படுத்தவண்ணம் ஆர்பாட்டத்தை மேற்கொள்ளும் ஆனந்த அளுத்தகமகே!

0
166

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மஞ்சல் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்நாவலபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை இடமாற்றம் செய்யக்கோரியே 10.03.2018 காலை 5 மணிமுதல் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி அட்டன் பிரதான வீதியின் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள மஞ்சள் கடவையில் படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையில் இடம்பெற்று வருவதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

2 DSC00591

ஆர்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைத்தந்துள்ள போதிலும் நீதியை சரியாக கடைபிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்பாட்டத்தை தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்தார்.

 

மு.இராமச்சந்திரன், க.கிஷாந்தன், எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here