‘கோதுமை மா அல்ல எமது பிரச்சினை’ – பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வை வழங்குங்கள்!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எஸ்.ஆனந்தகுமார் வேண்டுகோள்
பதினைந்து கிலோ கோதுமை மாவை குறைந்த விலையில் வழங்கினால் மலையக மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா?. மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முறையான தீர்வை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஒரு கிலோ 80 ரூபா வீதம் 15 கிலோ கோதுமை மாவை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென பஸில் அறிவித்திருந்தார். இதனை ஒரு வேடிக்கையான அல்லது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை அறியாது வெளியிட்டுள்ள கருத்தாகவே பார்க்க வேண்டியுள்ளது.
முழு நாட்டு மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை